மாமனிதர் ஜெயக்குமார் அவர்கள் வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தில்லைநடராஜா ஜெயக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 மார்ச் 2007 அன்று அவுஸ்ரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரில் சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.