லெப்டினன்ட் சௌந்தலன் அவர்கள் 2-ஆம் படிவம், தருமபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சின்னையா நாகராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 ஜூலை 1990 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு குறிஞ்சாத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச்சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.