லெப்.கேணல் ஞானசுதன் (மணி) அவர்கள் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி கணேசலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 டிசம்பர் 2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.