போருதவிப்படை வீரர் மயூரன் அவர்கள் பரமன்கிராய், பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். மகேந்திரம் மயூகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 செப்டம்பர் 2007 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டவெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.