லெப்.கேணல் அழகன் அவர்கள் செம்மலை, அலம்பில், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். மயில்வாகனம் விமலதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 டிசம்பர் 2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் தரவை - கொழும்பு சாலையில் சிறிலங்கா படையினருடம் ஒட்டுக்குழுவினரும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.