ஈரோஸ் மாவீரர் ராஜி அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். லோரன்ஸ் ஆரோக்கியநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 பிப்ரவரி 1984 அன்று திருகோணமலை மாவட்டம் யான்ஓயாப் பகுதியில் சிறிலங்கா படையினரால் கைதாகி மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.