கப்டன் தூயோன் (நேசன்) அவர்கள் உடுப்பிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆறுமுகானந்தம் ஜெயானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 2001 அன்று யாழ். மாவட்டம் தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.