கப்டன் வசுமதி அவர்கள் சின்னக்குளம், கந்தர்புரம், வவுனியாவைச் சேர்ந்தவர். குணசேகரம் ஜெயச்சித்திரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 நவம்பர் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.