மேஜர் இன்பநிலா அவர்கள் பாண்டியன்குளம், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். நடேஸ் மஞ்சுளா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஆகஸ்ட் 2001 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.