மேஜர் அறிவு அவர்கள் தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஜெயவேல்சிங்கம் சூரியகாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 பிப்ரவரி 2001 அன்று மன்னார் மாவட்டம் காளிமோட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.