மேஜர் நவகீதன் (நவரட்ணம்) அவர்கள் கிரான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நடராசா தங்கத்துரை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 நவம்பர் 2000 அன்று அம்பாறை மாவட்டம் ஒலிவில்ப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.