கடற்கரும்புலி மேஜர் சுடர்மணி (செங்கதிர்) அவர்கள் வண்ணாங்கேணி வடக்கு, பளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சிவராசா சிறீதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 2000 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை கடற்பரப்பில் டோரா பீரங்கி படகின் மீதான தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.