வீரவேங்கை எழில்வாணன் அவர்கள் ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வில்வரத்தினம் விஜயகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.