வீரவேங்கை செங்கொடி அவர்கள் சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வேலாயுதம்பிள்ளை கேசவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 17 செப்டம்பர் 2000 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.