2-ஆம் லெப்டினன்ட் நிசாந்தினி அவர்கள் 5-ஆம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கணேஸ் ஜெயந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாவற்குழி பகுதியை நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.