லெப்டினன்ட் செந்தில்வேல் அவர்கள் செம்பியன்பற்று, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாலசிங்கம் சுயதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாவற்குழி பகுதியை நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.