சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் ராசு அவர்கள் முழங்காவில், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். காளிமுத்து ராசு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் அரியாலை பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.