வீரவேங்கை இசைவிழி அவர்கள் ஜீவநகர், இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். முத்துராசா சியாமளா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் அரியாலை பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.