மேஜர் ரஞ்சி அவர்கள் 7-ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசேந்திரம் திலகராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் அரியாலை பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.