மேஜர் மிதுலா அவர்கள் கல்மடு, பூம்புகார், வவுனியாவைச் சேர்ந்தவர். உருத்திரன் கீதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் அரியாலை பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.