கப்டன் ஜோன்சன் அவர்கள் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சுந்தரலிங்கம் நிசாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1989 அன்று அம்பாறை மாவட்டம் தம்பிலுவில்ப் பகுதியில் ரெலோ மற்றும் தமிழ் தேசியபடைக் கும்பல்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.