மேஜர் நந்தன் (ஜெயமுருகன்) அவர்கள் 2-ஆம் பகுதி, திருவையாறு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கேசானந்தன் திவாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 ஜூன் 2000 அன்று யாழ். மாவட்டம் மட்டுவில்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.