2-ஆம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி அவர்கள் கண்டி, சிறிலங்காவைச் சேர்ந்தவர். செல்லத்துரை ஜெயநாயகி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 மே 2000 அன்று யாழ். மாவட்டம் தனங்கிளப்புப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.