மேஜர் சிந்து அவர்கள் கண்டி, சிறிலங்காவைச் சேர்ந்தவர். பொன்னையா ஜெயகாந் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ். மாவட்டம் கொழும்புத்துறைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 25 மே 2000 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.