வீரவேங்கை ஈழமகள் அவர்கள் வட்டக்கச்சி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். வேலுப்பிள்ளை தவேஸ்வரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 மே 2000 அன்று யாழ். மாவட்டம் கச்சாய்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.