2-ஆம் லெப்டினன்ட் புரட்சிக்குயில் அவர்கள் ஏழாலை தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பரராஜசிங்கம் அருள்மொழி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 மே 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் இத்தாவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.