மேஜர் அன்புமணி அவர்கள் இலுப்பையடிச்சேனை, வேப்பவெட்டுவான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வெற்றிவேல் தில்லைநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஏப்ரல் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் இத்தாவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.