2-ஆம் லெப்டினன்ட் காண்டீபன் அவர்கள் வயாவிளான் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புவனேந்திரன் சாள்ஸ்அமிர்தராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஏப்ரல் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.