கடற்புலி கப்டன் ஈழச்செல்வன் அவர்கள் கட்டைக்காடு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஜேம்ஸ் றதீஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 மார்ச் 2000 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.