2-ஆம் லெப்டினன்ட் பிரதீபா அவர்கள் கனகபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சச்சிதானந்தம் லட்சுமிஸ்சலா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 பிப்ரவரி 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.