கப்டன் வெற்றியரசன் அவர்கள் நீதிபுரம், மாங்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அருந்தவநாதன் தயானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 பிப்ரவரி 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் உமையாள்புரப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.