மேஜர் தீபன் அவர்கள் வத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மயில்வாகனம் ரகுதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 டிசம்பர் 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.