கப்டன் சதுர்க்கன் அவர்கள் 6-ஆம் வட்டாரம், துறைநீலாவணை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். விநாயகமூர்த்தி யுவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.