கடற்கரும்புலி மேஜர் முத்துமணி அவர்கள் காரைநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். குமாரசாமி சிவகாவேரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அங்கயற்கண்ணி நீரடி நீச்சற்பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 4 நவம்பர் 1999 அன்று மன்னார் கடற்பரப்பில் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.