மேஜர் சிவசங்கர் அவர்கள் கல்லுப்பிட்டி, கண்டாவளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். பொன்னம்பலம் குணபாலசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 1999 அன்று வவுனியா மாவட்டம் குறிசுட்டான் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.