கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் அவர்கள் சிவபுரி, திருகோணமலையைச் சேர்ந்தவர். நடராசா நடேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 அக்டோபர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் திடீரென ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.