லெப்டினன்ட் ரம்போ அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தணிகாசலம் ஜெகநேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 மே 1989 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறை ஆத்தியடிப் பகுதியில் இந்தியப் படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.