கப்டன் இளவரன் அவர்கள் நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். யேசுதாசன் நிரோஜின் அன்ரனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1999 அன்று யாழ். மாவட்டம் கட்டைக்காடு வெற்றிலைக்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.