2-ஆம் லெப்டினன்ட் கண்ணகி அவர்கள் குமரபுரம், பரந்தன், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். எட்மன் மோகனா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூன் 1999 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.