கப்டன் தமிழரசன் அவர்கள் மயிலிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். துரைராஜா தவகுலராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 ஜூன் 1999 அன்று யாழ். மாவட்டம் வறணிப் பகுதியில் சிறிலங்கா படை சுற்றிவளைப்பின்போது ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.