வீரவேங்கை பவித்திரா அவர்கள் 1-ஆம் குறிச்சி, மாவடிவேம்பு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பாலகிருஸ்ணன் தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூன் 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.