கப்டன் திருவேலன் (ஈசன்) அவர்கள் திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முத்துக்குமாரசாமி சிவறஞ்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 நவம்பர் 1998 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.