லெப்டினன்ட் இதயக்கண்ணன் அவர்கள் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவலிங்கம் சாந்தலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 அக்டோபர் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒலுமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.