வீரவேங்கை கிளிமொழி அவர்கள் விநாயகபுரம், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். விக்கினேஸ்வரன் விஜிமலர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஜூன் 1998 அன்று கிளிநொச்சி நோக்கி முன்னேற முயன்ற படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.