லெப்டினன்ட் பௌத்திரன் அவர்கள் நடுக்குடியிருப்பு, பனிச்சங்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கார்த்திகேசு புராந்தகராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 மே 1998 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மியான்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.