லெப்டினன்ட் ஈழமாறன் (ஈழநாதன்) அவர்கள் ஒட்டறுத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். காதர்முகைதீன் சருதீன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு மாவட்டம் ஒலுமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 7 ஏப்ரல் 1998 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.