2-ஆம் லெப்டினன்ட் சத்தியவதனி அவர்கள் நவக்கிரி மேற்கு, புத்தூர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசரட்ணம் குமுதாஞ்சலி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 பிப்ரவரி 1998 அன்று கிளிநொச்சி - பரந்தன் படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.