2-ஆம் லெப்டினன்ட் பூங்குயிலன் (பூங்குன்றன்) அவர்கள் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். செல்வரட்ணம் பிரதீப்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 பிப்ரவரி 1998 அன்று கிளிநொச்சி - பரந்தன் படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.