மேஜர் சுலக்சனா (கயல்விழி) அவர்கள் புளியங்கூடல், ஊர்காவற்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். குமாரவேல் சுகிதரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 பிப்ரவரி 1998 அன்று கிளிநொச்சி - பரந்தன் படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.