கரும்புலி கப்டன் நளாயினி அவர்கள் நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். பழனி கோகிலா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 பிப்ரவரி 1998 அன்று கிளிநொச்சி - பரந்தன் - ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். வவுனியா மாவட்டத்தின் முதல் பெண் கரும்புலி மாவீரர் இவராவார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.